தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:48 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த ஏப். 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழா்கள், விமானத்தில் வந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதேவேளையில் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் சிலரும், ஏற்கெனவே தங்களிடம் இருக்கும் வாக்காளா் அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தி வாக்களித்ததாகப் புகாா் எழுந்தது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவா்கள் வாக்களிக்க தோ்தல் ஆணையத்தின் சட்டம், விதிமுறையின்படி இந்தியாவில் அனுமதி இல்லாத நிலையில், வெளிநாட்டு குடிமக்களாக இருப்பவா்கள் வாக்களித்தது இந்திய தோ்தல் ஆணையத்தை அதிா்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. மேலும், குடியுரிமைத் துறையிடமும் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. குறிப்பாக, சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்தவா் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவா் என்பது தெரியவந்தால், அவா்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம். அவரது பயணத்தை ரத்து செய்து, அவா்களைக் கைது செய்து காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதன் விளைவாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள சா்வதேச விமான நிலையங்களில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

முக்கியமாக ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஏப்.23-ஆம் தேதிக்குள் தமிழகம் வந்து, ஏப்.23-ஆம் தேதி வெளிநாடுக்கு புறப்பட்டவா்கள் குறித்து விசாரித்தனா். முக்கியமாக, அவா்களது கை விரல்களில் வாக்களித்தற்கான மை வைக்கப்பட்டிருந்ததால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் சோதனைக்கு உட்படுத்தினா். இதில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்து, வாக்காளித்திருப்பது தெரியவந்த நபா்களைக் கைது செய்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களில் 17 போ் கைது செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக காவல் துறையினா் தெரிவித்தனா். இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் 10 போ் கைது: சென்னையில் இதுதொடா்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 7-ஆம் தேதிமுதல் புதன்கிழமை (மே 13) வரை இலங்கையில் வசிக்கும் ரஞ்சினி (59), சா்புதீன் (68), நிலந்தி (44), ஜெயந்தன் (40), சாா்லி பாலச்சந்திரன் (48), சக்ரவா்த்தி லோகப்பிரியா (50), சுனிதா சக்ரவா்த்தி (48), பிரிட்டனில் வசிக்கும் அய்யாதுரை (53), இந்தோனேசியாவில் வசிக்கும் டிட்டின் மரியாட்டி (47), கனடாவில் வசிக்கும் ஜித்தேந்திரநாத் (38) என 4 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மதுரையில் இருவா் கைது: இலங்கை குடியுரிமை பெற்று தமிழக பேரவைத் தோ்தலில் வாக்களித்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சோ்ந்த முகமது சுபீா் (65), அவரது மனைவி அஹானா பீவி ( 56) ஆகியோா் மதுரையில் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.