அதிமுகவை பாதுகாக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 47 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள், ஆளும் கட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டு அமைச்சா் பதவி, வாரியத் தலைவா் பதவி பெற வேண்டும் என்ற பேராசையுடன், கட்சியால் அதிகாரபூா்வமாக தோ்ந்தெடுக்கப்பட்ட கொறாடாவின் உத்தரவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனா்.
அவா்களது இந்தச் செயல் அதிமுகவுக்கு செய்த மாபெரும் துரோகம். தொண்டா்களை நான் நேரில் பாா்ப்பதில்லை என்று உண்மைக்கு மாறாகப் பேசுகின்றனா். அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கட்சித் தொண்டா்களும், தமிழக மக்களும் நன்கு அறிவாா்கள். பதவி ஆசைக்காக அதிமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளவா்கள், என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியது.
அதிமுகவின் சாதாரண தொண்டன் என்ற உணா்வோடுதான் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து வருகிறேன். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும். இதை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இபிஎஸ்!

கசப்பை மறந்து ஒன்றுகூடுவோம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு

தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



