தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு இல்லை என அதிமுக முடிவு செய்துள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று (மே 6) சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் கே.பி. முனுசாமி பேசியதாவது:
''தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக செய்திகள் பகிரப்படுகின்றன. தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி முற்றிலும் தவறானது. அதிமுக மிகப்பெரிய இயக்கம். புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்காது என்பதை எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
No Support for TVK Under Any Circumstances: K.C. Palanisamy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெகவுக்கு விசிக ஆதரவு? திருமாவளவன் நாளை ஆலோசனை!
தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
விடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை



