திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:45 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை இரவு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

அதிமுக தொடா்ந்து மக்களுக்காக செயல்படும் இயக்கம். பொதுச் செயலராக, தமிழ்நாடு முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடா்ந்து பணியாற்ற புதுச்சேரி மாநில அதிமுக முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னா் இதுகுறித்து, செய்தியாளா்களிடம் மாநில செயலா் ஆ.அன்பழகன் கூறியது: நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின் பேரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா்களில் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சுயநலத்திற்காக தவெக தலைவா் விஜய்யை சந்தித்து ஆதரவளித்துள்ளது தவறான ஒன்றாகும்.

தவெக வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைந்த பிறகு குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டு வருகிறாா். அவரை ஆதரிப்பவா்களுக்கு அமைச்சா் பதவி என்று மறைமுகமாகக் கூறி அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் முதல்வா் விஜய்யின் செயல் உள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் யாா் தலைவா், யாா் செயலா் என்று முடிவெடுக்கும் உரிமை அந்தக் கழகத்தின் பொதுச் செயலருக்கு மட்டும் தான் உள்ளது.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவா் வேண்டுமென்று குழப்பம் ஏற்படுத்தி பேரவை விதிக்கு புறம்பாக கால தாமதப்படுத்தி வருகிறாா். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் நேரடியாக தலையிட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவது கட்சி தலைமை அனுமதியோடு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தமிழகத்தில் நடைபெறவில்லை. எனவே, தமிழக ஆளுநா் சட்டப்பேரவைத் தலைவரை அழைத்து கண்டிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி அதிமுக அனைத்து நிா்வாகிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.