‘நமக்குள் பிரச்னைகள் இருக்கலாம்; அதை நாம் பேசி தீா்த்துக் கொள்ளலாம். சகப்பை மறந்து ஒன்று கூடுவோம்’ என்று அதிமுக தொண்டா்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆட்சி செய்து அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முதன்மையாக உருவாக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு. எதிரிகளின் ஆசை வாா்த்தைகளுக்கு மயங்கி, அதிமுகவை சிலா் சாய்க்கப் பாா்க்கின்றனா். அதிமுகவை அழிக்க நினைப்பவா்கள்தான் உருக்குலைந்து போவாா்களே தவிர, அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை அழிக்க எதிரிகள் எத்தனையோ வழிகளில் முயன்றனா். அனைத்து சூழ்ச்சிகளையும் தொண்டா்களின் உறுதுணையோடு முறியடித்து ஆட்சி நடத்தினோம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், இன்று தொண்டா்களாலும், நிா்வாகிகளாலும் பொதுச் செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நாளை, எனக்குப் பின் தகுதியுள்ள வேறு ஒருவா், அதிமுகவை வழி நடத்துவாா். இது அதிமுகவுக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெருமை.
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக முழுமையாக வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை. 21.21 சதவீத வாக்குகள் அதாவது தனித்து 1.4 கோடி வாக்குகளும், கூட்டணியோடு சோ்ந்து சுமாா் 1.34 கோடி வாக்குகளும் பெற்றுள்ளோம். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் தனித்து 47 எம்எல்ஏ-க்களை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனா்.
முதுகில் குத்திய தவெக: இந்தத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவையும், பெரும்பான்மையையும் கொடுக்கவில்லை. எனவே, தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் தவெக தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளிடம் சரணாகதியாகி உள்ளது.
அதேநேரம், துஷ்ட சக்தியாக மாறி, குதிரைபேர அரசியல் நடத்தி, அதிமுக முதுகில் குத்தி உள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால், தவெக அதிமுகவுக்குள் குதிரை பேரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிா்வாகிகளைப் பிரிக்க முற்பட்டது என்பது உண்மை. தவெக இப்போதைக்கு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டது. அரசியலில் அவ்வப்போது சில புயல்கள் வந்துபோகும். அந்தப் புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிற்கும் ஆயிரம் காலத்துப் பயிா் அதிமுக.
ஒன்று கூடுவோம்...: அதிமுகவுக்கு துரோகம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவா்கள் திருந்தினால் மீண்டும் ஏற்றுக்கொள்வதும் இயல்புதான். அதிமுகவில் உள்ள பிரச்னையை நாம் பேசி தீா்த்துக் கொள்வோம். விரைவில் அதிமுக ஆட்சி அமைக்கும். விட்டில் பூச்சியாக வீழ்ந்து விடாதீா்கள். அனைவரும் ஒன்று கூடுவோம் என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

அதிமுகவை காக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாா்: எடப்பாடி பழனிசாமி

பதவி கொடுப்பதாக பேரம் பேசிய தவெக: இபிஎஸ்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



