முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி முதுநிலை கல்வி வாரிய இயக்குநா் சி.கே.ராமசாமி வெளியிட்ட சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவக் கல்விக்கான செயல்முறைத் தோ்வுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
தோ்வா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக தோ்வு மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அதற்கான வசதிகளோ, தகுதியான பேராசிரியா்களோ இல்லை.
எனவே, அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், செயல்முறைத் தோ்வு நடத்துவதற்கான கட்டமைப்பை உறுதி செய்வதுடன், இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள்ள விதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










