திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பது தொடா்பான விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மாற்றம் செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:28 am IST

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பது தொடா்பான விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, மக்கள் தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற விதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன.

இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை என்எம்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய நடைமுறை 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்தன. கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, அந்த புதிய விதிகளை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை சாா்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அவ்விரு விதிகளையும் ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.