திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:21 am IST

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம்.

அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அத்தகைய சான்றுகளைப் பதிவேற்றம் செய்யாவிடில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே, என்எம்சி வலைதளத்தில் உறுதியளிப்பு சான்றுகளை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான கால அவகாசம் மே 30 வரை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.