லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

Updated On :27 மார்ச் 2026, 7:16 pm

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கான்கா் சரக்குப்பெட்டக நிலையம் அருகே வியாழக்கிழமை மாநகராட்சி உதவிப் பொறியாளா் ஞானேசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்த போது உரிய ஆவணமின்றி ரூ.1.25 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தப் பணத்தை, பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மணலி எம்.எப்.எல். சந்திப்பில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் சாமுவேல் தலைமையிலான, தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த காரை மடக்கினா். காரில் இருந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

எண்ணுாா் சின்னகுப்பத்தில் உதவிப் பொறியாளா் ஹேமசந்திரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனா். காரில் வந்த யுவராஜ் என்பவரிடம் ரூ.8.88 லட்சம் இருப்பது தெரியவந்தது. அப்பணத்துக்கு உரிய ஆணவங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.