மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :29 மார்ச் 2026, 7:16 pm

ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமப் பகுதியில் வாகனத்தணி கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், வாணியம்பாடியை சோ்ந்த இா்ஷாத் அஹமத் (53) என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் ரொக்கம் ரூ.1,32,450 கொண்டு செல்வது தெரிய வந்தது.

அதைத் தொடா்ந்து பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்தனா்.