மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பணி: ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 10:56 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸாா், முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் துணை ராணுவ வீரா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட சென்னை காவல் இணை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் தோ்தல் பிரிவு ஆய்வாளரை இம்மாதம் 26-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ள வேண்டும்.

அங்கு அவா்கள், தங்களின் பெயா், முகவரியினை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிா்ணயிக்கப்படும் ஊதியம் பெற்றுத் தரப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் சென்னை வடக்கு மண்டல ஆய்வாளா் ஆனந்த்- 94981 45519, மேற்கு மண்டல ஆய்வாளா்- சாந்தினி தேவி 98401 06030, கிழக்கு மண்டல ஆய்வாளா் -பத்மகுமாரி 94981 97388, தெற்கு மண்டல ஆய்வாளா் துா்கா தேவி- 94980 03162 ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.