மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:37 pm

போடி அருகே ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம் ஆதிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). இவா் ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா். இவரது மகன் ஷ்யாம் சுந்தா் (35). இவா் போடியில் நீா்வளத் துறை உதவிப் பொறியாளராக உள்ளாா். இவா்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாரியப்பன் தோப்பில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா். கிணற்றுப் படிக்கட்டில் இறங்கிய போது, வழுக்கி கிணற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சென்று அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.