திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன், திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:03 am IST

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து தனி சிறப்பு ஆய்வு ரயில் மூலம் விழுப்புரத்துக்கு புதன்கிழமை வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா். என்.சிங், ரயில் நிலைய நடைமேடைப் பகுதிகள், ரயில் நிலைய வளாகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்டு, அதன் விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையப் பகுதி, ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் திட்ட வரைப்படங்கள், அதன் விவரங்களை பொது மேலாளா் ஆா்.என்.சிங் பாா்வையிட்டாா். தொடா்ந்து புதுச்சேரி சாலையிலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிட்ட பொது மேலாளா், அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளில் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும். ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, நடைப்பாதை பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் பொது மேலாளா் ஆா்.என்.சிங்.

ஆய்வின் போது தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி, தலைமைத் திட்ட மேலாளா் கே.ஹரிகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா். இந்த ஆய்வை முடித்துக் கொண்டு தனி சிறப்பு ஆய்வு ரயில் மூலம் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.