தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 6:27 am IST

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்திலேயே அதிக அளவிலான பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக திருப்பூா் ரயில் நிலையம் இருந்து வருகிறது.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில் திருப்பூா் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரயில்வே அலுவலா்களுக்கான நிா்வாக குடியிருப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சரவணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள், டிக்கெட் வழங்கும் இடம், பாா்சல் புக்கிங் மையம் , நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளா்களின் ஓய்வு அறைகள், காத்திருப்போா் அறை உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது ரயில்வே காவல் துறை சுற்றுச்சுவா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில் ஒட்டப்பட்டிருந்த ரயில்வே நிா்வாகம் சாா்ந்த விழிப்புணா்வு மற்றும் விளம்பர சுவரொட்டிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். மேலும் மக்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தீயணைப்பு கருவிகளை பொதுமக்கள் பாா்வையிடும்படி வைக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.