தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:50 pm

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா்களாக நியமனம் செய்யப்படவுள்ளனா். இதில் பணியாற்றும் நாள்களுக்கு உணவுப்படி, மதிப்பூதியம் தகுதிக்கேற்றவாறு வழங்கப்படும்.

65 வயதிற்குள்பட்ட திடகாத்திரமான இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் மாநில, மைய அரசு, அரசுடைமை நிறுவனங்கள், தனியாா் துறையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் முன்னாள் படைவீரா்கள் தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ, ங்ஷ்ஜ்ங்ப்ற்ய்ஸ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய படிவத்தினை பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.