தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:31 pm

தென்காசி மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.

தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, காவல் துறை பாா்வையாளா் சுஷாந்த் குமாா் சக்ஸேன ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுலவா் சீ. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.