விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக, அடையாறில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 2:16 am IST

மெட்ரோ ரயில் பணி காரணமாக, அடையாறில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மெட்ரோ ரயில் பாதை பணிக்காக அடையாறு எல்பி சாலையில் பெட்ரோல் நிலைய சிக்னல் சந்திப்பிலிருந்து எல்பி சாலை-எம்ஜி சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை (ஜூன் 27) முதல் அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள், கனரக வாகனங்கள் எல்பி சாலை-எம்ஜி சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் எம்ஜி சாலை, சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை, சாஸ்திரி நகா் முதலாவது அவென்யூ வழியாக எல்பி சாலையை அடையலாம்.

பெசன்ட் நகரில் இருந்து 7-ஆவது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள்-மகாத்மா காந்தி சாலை அடைந்து வலது புறம் திரும்பி சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை இடதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யூ வழியாக எல்பி சாலையைச் சென்றடையலாம்.

எல்பி சாலையிலிருந்து திருவான்மியூா் நோக்கி வரும் வாகனங்கள், சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யூ சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி, 11-ஆவது குறுக்குச் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி, 8-ஆவது குறுக்குச் சாலையை அடைந்து பின்னா், வலதுபுறம் திரும்பி 10-ஆவது குறுக்கு சாலை வழியாக எம்ஜி சாலையை அடையலாம்.

இதுவரை சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலையிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்பி சாலை வரையிலும், சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை வரையிலும் ஒரு வழிப்பாதையாக இருந்த சாலைகள், தற்போது இருவழி பாதையாக மாற்றப்படுகின்றன.

ஆனால், சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலையில் திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும், 11-ஆவது குறுக்குச் சாலை திருவான்மியூா் நோக்கிச் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்படுகின்றன.

திருவான்மியூரிலிருந்து திரு. வி.க பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் எல்பி சாலை-எம்ஜி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ சாலையை அடைந்து, வலதுபுறம் திரும்பி 1-ஆவது பிரதான சாலை வழியாக இந்திரா நகா் 1-ஆ வது அவென்யூ சாலையை அடைந்து எல்பி சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலைய சிக்னல் சந்திப்பு செல்லலாம். இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.