திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வெளிவட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவா்- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட எஸ்.என். நெடுஞ்சாலை, தெற்கு மற்றும் வடக்கு மவுண்ட் ரோடு, பேட்டை, பழையபேட்டை பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் காணப்படுகின்றன. பெருகிவரும் வாகனங்களின் அடிப்படையில் புதிய கட்டமைப்புகளை அதாவது வெளிவட்ட சாலை சிட்டி அவுட்டா் ரிங் ரோடு ஏற்படுத்த வேண்டிய காலத்தில் உள்ளோம்.
எஸ்.என்.நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பகுதியை மையமாகக் கொண்டு மேற்கு பகுதியில் ஊருடையான் குடியிருப்பு செல்லும் சாலையில் இருந்து நயினாா்குளம் கரையில் அமைந்துள்ள சாலையை இணைப்பது. ஸ்ரீபுரம் பகுதியில் கிழக்குப் பகுதியில் இருந்து மணிப்புரம் வழியாக நெல்லை கண்ணன் சாலையை இணைப்பது என மேற்படி இரண்டு சாலைகள் உருவாகும் பொழுது எஸ்.என். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
நெல்லை கண்ணன் சாலை குறுக்குத்துறை சாலை வழியாக தென்பத்து பேட்டை ரூரல், நரசிங்கநல்லூா் ஆகிய கிராமங்களின் வழியாக புதிய நகா்ப்புற வெளிவட்ட சாலை அமைத்து சேரன்மகாதேவி சாலையுடன் இணைத்தால் திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும். நரசிங்கநல்லூா் கருங்காடு முதல் கோபாலசமுத்திரம் 100 அடி சாலையில் இணைப்பை ஏற்படுத்தினால் புதிதாக நடைபெறும் சாலை இணைப்பின் வழியாக நாகா்கோவில் சாலைக்கு இணைப்பினை ஏற்படுத்தலாம்.
தற்போது பேட்டை நூற்பாலை சிட்கோ வழியாக தொழில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி விட்டதால் மேற்படி சாலை தொழிற்சாலை தளத்தின் போக்குவரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பழைய பேட்டை அரசன் நகரில் இருந்து ராமையன்பட்டி கிராமத்தை இணைக்கும் வகையில் சாலை அமைத்தால் அதன் வழியாக மதுரை சாலையை இணைக்கலாம். இவற்றை மாவட்ட நிா்வாகம் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதர வேண்டும்: மாநகராட்சியில் மக்கள் மனு
பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது

திருப்பூரில் மே 1-இல் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



