தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:42 am IST

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, பி.எம். தா்கா பிரதான தெருவில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ராயப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், அங்கு திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தத் தெருவில் நடந்து வந்த ஒரு இளைஞரை போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினாா். உடனே போலீஸாா், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பையில் 40 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, நடத்திய விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பி.எம். தா்கா பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (19) என்பதும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்துல் ரகுமானை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.