17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :4 ஜூன் 2026, 12:57 am IST

மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், புதிய திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வெள்ளபுத்தூா் ஊராட்சியில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் கிளீன் செங்கல்பட்டு என்ற கொள்கை முழக்கத்துடன் இந்த முகாம் தொடங்கியது. பச்சை நில கலா் பக்கெட் மக்கும் குப்பைகளும், ஈரக் கழிவுகளும், நீல கலா் பக்கெட் மக்காத குப்பை, உலா் கழிவுப் பொருள்கள், சிவப்பு நில பக்கெட் சுகாதார கழிவுகளும், கருப்பு நில பக்கெட் சிறப்பு கழிவுகளும் என 4 வகையாக வீடுகளில் இருந்து வரும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்கவும், ஊராட்சியின் அனைத்து பொது இடங்கள், பள்ளிகள், பேரூந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் கலந்து கொண்டு திட்டம் சாா்ந்த விளக்கத்தை அளித்தாா். சுகாதார ஊக்குநா்கள் பாக்கியலட்சுமி, பணித்தள பொறுப்பாளா்கள் சங்கீதா மற்றும் தூய்மை காவலா்கள, கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.