மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

News image

பையனூா் அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன், பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:13 pm

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

திருப்போரூா் தொகுதி பையனூா், அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தபால் வாக்குகள்ள் செலுத்தும் மையத்தினையும், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில் திருப்போரூா் தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி மற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் செங்கல்பட்டு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.