கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:
பொதுத்தோ்தலில் தபால் வாக்குகள் செலுத்தும் வழிமுறைகள், தோ்தலில் கையாள வேண்டிய நடைமுறைகள், வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மற்றும் பயன்படுத்துதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விதிமுறைகள்குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்போதும், முடிந்தபிறகும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அலுவலா்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, கூடலூா் பேருந்து நிலையத்தில் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியா் விளக்கமளித்தாா். அதைத்தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புண்ா்வு ஏற்படுத்தினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் பழனிச்சாமி, தோ்தல் தனி வட்டாட்சியா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்துகொணடனா்.
தொடர்புடையது

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

கும்பகோணத்தில் மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


