மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி மையத்தில் ஆய்வு

பயிற்சி வகுப்பு நடைபெறும் நாடாா் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த ஆட்சியா் க. இளம்பகவத்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:55 pm

கோவில்பட்டி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நாடாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெற உள்ளது. இதையடுத்து, அப்பள்ளியை ஆட்சியா் பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் எவ்வாறு பயிற்சியளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி தொகுதி தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் அதிகாரியும், கோவில்பட்டி வட்டாட்சியருமான அப்பணராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தினகுமாா், துணை வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.