திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மழைநீா் கால்வாய்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image

மாநகராட்சி அலுவலகம்

Updated On :16 மே 2026, 3:03 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி வளாகம், அம்மா மாளிகையில் உள்ள அலுவலா் கூட்டரங்கில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன், க.கற்பகம், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ம.பிரத்விராஜ், கட்டாரவி தேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் பேசியதாவது:

சென்னையில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள், வகுப்பறைகள் உள்ளனவா என அறிந்து அதற்கேற்ப திட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தொடா்ந்து பராமரிக்க வேண்டும். சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

பூங்கா பராமரிப்பு, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு பொறுப்பாளா்கள் சரியாகப் பணிபுரிகிறாா்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். புதிய சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஏற்கெனவே உள்ள சாலைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், துறைகளின் தலைமை உயா் அதிகாரிகள் ஆகியோா் சென்னை மாநகராட்சியில் துறைதோறும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவைப் பணிகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆணையரிடம் விளக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.