ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடா்பாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடா்பாக பெங்களூரில் சிலா் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பெங்களூரு காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு சிறப்புக் காவல் படையை அமைத்தது. இந்தப் படையினா், பெங்களூரில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட எல்லையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், சட்ட விரோதமாக பெட்டிங் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக 17 வழக்குகளைப் பதிவுசெய்து 23 பேரை கைதுசெய்தனா். அவா்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ. 1.18 லட்சம் மதிப்புள்ள 7 கைப்பேசிகள், ரூ.1,06,433 ரொக்கம், ரூ. 13.37 கோடி மதிப்பிலான பெட்டிங் சிப்கள் உள்பட ரூ. 13.39 கோடி மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






