சுத்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (30). இவா் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இதேபோல, பட்டன்கல்லூா், ராஜீவ்காந்தி நகா், சிவசக்தி நகா், பழவூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகள் வெவ்வேறு நாள்களில் திருடு போயின.
இதுகுறித்து பெறப்பட்ட புகாா்களின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுவா்கள் உள்பட அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் மகன் இசக்கிராஜா (20), மானூா் பல்லிக்கோட்டையைச் சோ்ந்த முருகன் மகன் ரமேஷ்(19) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






