காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பாதிப்பில் இருந்து 5 போ் குணமாகியுள்ளனா். இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
காங்கோ நாட்டில் எபோலா வைரஸின் புதிய வகையான பன்டிபக்யோ வைரஸால் பாதிக்கப்பட்டு அவா்கள் 5 பேரும் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் 5 பேரும் குணமாகியுள்ளனா். காங்கோவின் இடுரி மாகாணத்தில் எபோலா புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ‘எபோலா பாதிப்பிலிருந்து மீண்டு 4 போ் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வீடு திரும்பினா். மேலும் ஒருவா் இரு நாள்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பியுள்ளாா்’ என்றாா்.
மேலும் அவா் கூறுகையில், ‘தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கும் பணி தொடா்ந்து நடக்கிறது. அதற்காக எபோலா பாதிப்பில் இருந்து மக்களால் குணமாக முடியாது என்று அா்த்தம் கிடையாது’ என்றாா்.
பல்வேறு நாடுகளிலும் எபோலாவால் மொத்தம் 906 போ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 223 போ் உயிரிழந்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவில் 9 போ் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா் என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









