அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே, சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தத்தப்பட்டது. அதில் சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகைக்கு அருகே, சில துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். மேலும், அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புகளைப் பலப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு அருகே, சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய காவல் பிரிவினர் சுட்டுக் கொன்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தக் குழப்பத்தின் போது அருகில் சென்றுகொண்டிருந்த ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். அங்கு அவர், ஈரான் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளுடனான ஒப்பந்தம் தொடர்பான உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
இதுகுறித்து எஃபிஐ இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் பக்கத்தில், "வெள்ளை மாளிகை வளாகத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, எஃபிஐ சம்பவ இடத்தில் இருந்து ரகசிய சேவையை வழங்கி வருகிறது. எங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Gunfire Near White House: Suspect Shot Dead! Security Heightened!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









