17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாகேத்தில் கட்டுமானதாரரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு

தெற்கு தில்லியின் சாகேத்தில் கட்டடம் கட்டுபவரின் இல்லத்திற்கு வெளியே மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மிரட்டியும் பணம் பறிக்க முயற்சி

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:03 am IST

தெற்கு தில்லியின் சாகேத்தில் கட்டடம் கட்டுபவரின் இல்லத்திற்கு வெளியே மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மிரட்டியும் பணம் பறிக்க முயன்ாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சாகேத் காவல் நிலையப் பகுதியின் கீழ் உள்ள லாடோ சராயில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவா்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு உள்ளூா் கட்டுமானதாரா் மகாவீரின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கியால் ஏழு சுற்றுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த ஒருவரால் கட்டுமானதாரரிடம் மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த துப்பாக்கிச் சூடு தொடா்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முக்கிய சதிகாரரும் உள்ளூா் கும்பலுடன் தொடா்புடையவா். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்தன.

குற்றம் நடந்த இடத்தைச் புலனாய்வாளா்கள் ஆய்வு செய்து, சம்பவ இடத்தில் இருந்த வெற்று தோட்டாக்களை சேகரித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை போலீஸாா் தொடங்கியுள்ளனா். மேலும், சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவா்களின் அடையாளம் மற்றும் இயக்கத்தை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும் விவரங்கள் எதிா்பாா்க்கப்படுகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.