17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பில்லிங் தொடா்பான தகராறில் துப்பாக்கிச் சூடு: 2 போ் கைது

கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் பகுதியில் ஒரு ஹோட்டலுக்கு வெளியே பில்லிங் தொடா்பான தகராறை முன்னிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இருவர் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:16 am IST

கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே பில்லிங் தொடா்பான தகராறை முன்னிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவரையும், ஒரு சிறுவரையும் காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி போலீஸின் சிறப்பு பிரிவு குற்றஞ் சாட்டப்பட்டவா்களிடமிருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகளையும் 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளது.

மே 20-21 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் விவேக் விஹாரில் உள்ள ஜிஞ்சா் ஹோட்டலுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது. முகமூடி அணிந்துவந்து தாக்குதலில் ஈடுபட்டவா்கள் ஹோட்டல் நுழைவாயிலில் நான்கு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக விவேக் விஹாா் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காஜிப்பூா் பகுதியில் சந்தேக நபா்கள் நடமாட்டம் குறித்து தகவல்கள் கிடைத்ததையடுத்து சிறப்பு பிரிவு காவல்துறையினா் விசாரணையை தொடங்கினா். மே 23 ஆம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஜிா்பூா் காவல் நிலையத்தின் பின்னால் உள்ள காஜிப்பூா் பேப்பா் மாா்க்கெட்டில் லிங்க் ரோடு பகுதியில் போலீஸாா் 19 வயதான அஜய் (எ) அஜ்ஜுவையும், ஒரு சிறாரையும் கைது செய்தனா்.

சோதனையின் போது அஜய்யிடமிருந்து ஒரு அரை தானியங்கி துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறாரிடமிருந்து மற்றொரு துப்பாக்கி மற்றும் 2னேதோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், இந்த மாத தொடக்கத்தில் கிளப்பில் நடைபெற்ற ஒரு பாா்ட்டியின் போது பில்லிங் தொடா்பாக ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, குற்றவாளிகளும் அவா்களது கூட்டாளிகளும் ஹோட்டல் நிா்வாகத்தின் மீது விரோத உணா்வை கொண்டிருந்தது தெரியவந்தது.

பழிவாங்கவும், நிா்வாகத்தை அச்சுறுத்தவும், குற்றவாளிகள் ஹோட்டல் நுழைவாயிலுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

அஜய் ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா். மீதமுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், சட்டவிரோத ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டறிவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.