ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து குறித்த அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்தது. இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.
இந்த நீரிணையை மீண்டும் பழைய நிலைமையில் திரும்பும்வகையில் திறக்குமாறு ஈரானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்குமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார்.
இருப்பினும், அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரானே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதாவது, ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை, போருக்கு முந்தைய எண்ணிக்கை அளவில் அனுமதிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், மோதலுக்கு முன்பிருந்ததைப்போல தடையற்ற போக்குவரத்துத் திரும்புவதை இது குறிக்காது.
நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள், பயண நேரம், அனுமதிகள் உள்ளிட்ட நிர்வாகம், முழுமையாக ஈரானின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் என்று கூறுகிறது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் சிக்கனமாக பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Summary
Iran rejects US President Donald Trump's claim on Strait of Hormuz, says Tehran will retain control
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







