17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 8:16 am IST

ஹோர்முஸ் நீரிணை மீது ஏவப்பட்ட ஈரானின் டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை மீது நான்கு ஈரானிய டிரோன்கள் ஏவப்பட்டதாகவும் அதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் சில கடலோரக் கண்காணிப்பு ரேடார் தளங்களைத் தாக்கியதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ”நாம் ஈரானிலிருந்து மிக விரைவாக வெளியேறப் போகிறோம். மேலும் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே உரங்களின் விலையும் வெகுவாகக் குறையும்" என்று தெரிவித்தார்.

உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் செயல்படாமல் உள்ளதால் உலகின் பல நாடுகளில் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. மேலும், சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், எரிபொருள்களான பெட்ரோல், டீசல், எல்பிஜி, சிஎன்ஜி போன்ற பொருள்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The US military has stated that it shot down Iranian drones over the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.