குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 2.30 மணிக்குத் தாக்குல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் நாட்டிலுள்ள அலி அல் சலீம் விமானப் படைத் தளம் மற்றும் குவைத்திலுள்ள ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் ஆகிய அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, ஈரானிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் வந்த 4 எண்ணெய்க் கப்பல்கள், ஈரானிய கடற்படையின் தொடர் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் சட்டவிரோதமான முறையில் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சி செய்தன.
இதனால், ஒரேயொரு எண்ணெய்க் கப்பலைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதும், மற்ற கப்பல்கள் திரும்பிச் சென்றன. இந்த மோதலைத் தொடர்ந்து கெஷ்ம் தீவின் தகவல் தொடர்பு கோபுரங்களை அமெரிக்க ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
பதிலடியாக, அலி அல் சலீம் விமானப் படைத்தளம் மற்றும் அமெரிக்க ஐந்தாம் கடற்படைத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குவைத்தின் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரான் படைகள் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The Iranian military has announced that it has carried out attacks targeting US bases in Kuwait and Bahrain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம்! ஒருவர் பலி!
போர்நிறுத்த சூழலிலும் குவைத் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!
உலகிற்கு ஒரு நல்ல செய்தி! என்ன சொல்லப்போகிறது அமெரிக்கா?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




