உகாண்டா-காங்கோ எல்லை மூடிய நிலையில் வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எபோலா தொற்று காராணமாக உகாண்டாவிற்கும் - காங்கோவிற்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மணிக்கணக்காக எல்லையில் காத்திருக்கின்றனர்.
உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த, காய்கள், பழங்கள் உள்ளிட்ட வர்த்தக பொருள்களிலிருந்து நீர் கசியத் தொடங்கியிருப்பதாகவும், எல்லையை திறக்காவிட்டால் பொருள்கள் அனைத்தும் நாசமாகும் என வர்த்தகர்கள் புலம்பி வருகின்றனர்.
எபோலா தொற்று எல்லைத் தாண்டி பரவுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, லாரிகள் உகாண்டாவிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று போண்ட்வே எல்லைச் சாவடி வழியாக லாரிகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என உகாண்டா வர்த்தகர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எல்லை திறக்கப்படவில்லை. பொருள்கள் அனைத்தும் அழுகிக்கொண்டிருக்கிப்பதாக வர்த்தகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கோவின் கிழக்கு இட்டுரி மாகாணத்தில் எபோலா பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 28 அன்று உகாண்டா மேற்கு எல்லையை மூடியது.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், சரக்கு போக்குவரத்து அல்லது பாதுகாப்பு காரணங்கள் போன்ற அவசரச் சூழல்களில் மட்டுமே விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன.
ஆனால் சமீப நாள்களில், கிழக்கு காங்கோவில் எபோலா பரவல் அதிகமாக இருந்ததால், உகாண்டாவின் எல்லை மாவட்டமான கசெஸேவில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கினர்.
எபோலா தொற்று குறித்த அச்சத்தாலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்திருந்தாலும், லாரிகளை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், பொருள்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களைக் காங்கோ நகரங்களான பெனி, புடெம்போ ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தன. அந்தக் காங்கோ நகரங்கள் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ளனவே தவிர, எபோலா பரவலின் மையப்பகுதியான இட்டுரி மாகாணத்தில் இல்லை. எனவே, சரக்கு உரிய இடத்திற்குக் கொண்டுசெல்லாவிடில் பெரிய பண இழப்பு ஏற்படும். எபோலா எங்கள் உழைப்பை வீணாக்கிவிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
Leah Masika was on the verge of tears as she thought of her valuable consignment of plantain stuck in a long convoy of trucks on both sides of the Uganda-Congo border.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










