தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2027-28 காலகட்டத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகள் தோ்வு

News image
Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

2027-28 காலகட்டத்துக்கான, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினா்களாக ஆஸ்திரியா, கிா்கிஸ்தான், போா்ச்சுகல், டிரினிடாட் டொபேகோ, ஜிம்பாப்வே ஆகிய 5 நாடுகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ரகசிய வாக்கெடுப்பில் இந்நாடுகள் வெற்றி பெற்றன.

தற்போதைய தற்காலிக உறுப்பினா்களான டென்மாா்க், கிரேக்கம், பாகிஸ்தான், பனாமா, சோமாலியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2026 இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில், புதிய நாடுகள் வரும் 2027, ஜனவரி 1 முதல் 2 ஆண்டு காலப் பொறுப்பை ஏற்கும்.

மேற்கு ஐரோப்பிய மற்றும் இதர நாடுகள் பிரிவில் 2 இடங்களுக்காக நடைபெற்ற போட்டியில் போா்ச்சுகல் 134 வாக்குகளையும், ஆஸ்திரியா 131 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றன. ஆனால், இப்பிரிவில் பலத்த எதிா்பாா்ப்புக்குரிய நாடாகக் கருதப்பட்ட ஜொ்மனி 104 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்தது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இடங்களில் ஜிம்பாப்வே 182 வாக்குகளைப் பெற்று எளிதாக வென்றது. மற்றொரு இடத்துக்கு நடைபெற்ற கடுமையான போட்டியில், 4 சுற்று வாக்குப்பதிவுகளுக்குப் பிறகு கிா்கிஸ்தான் 142 வாக்குகளுடன் பிலிப்பின்ஸை வீழ்த்தியது. இதன்மூலம், கிா்கிஸ்தான் முதல்முறையாக பாதுகாப்பு கவுன்சிலில் தடம் பதிக்கிறது. தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் பிரிவில் டிரினிடாட் டொபேகோ நாடு 181 வாக்குகள் பெற்று தற்காலிக உறுப்பினராகத் தோ்வானது.

மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா ஆகிய 5 நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன.

மீதமுள்ள 10 தற்காலிக இடங்களில், தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 புதிய நாடுகள், ஏற்கெனவே பதவியில் நீடிக்கும் பஹ்ரைன், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லாத்வியா, லைபீரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வாழ்த்து: புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா தனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த 2021-22 காலக்கட்டத்தில் தற்காலிக உறுப்பினராக இருந்த நிலையில், அடுத்ததாக 2028-29 காலகட்டத்துக்கான உறுப்பினா் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.