தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:19 am IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களாகவும், மேலும் 10 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரமில்லாத தற்காலிக உறுப்பினா்களாகவும் உள்ளன.

இந்த கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும், நிரந்தர உறுப்பினா்களாக தங்களையும் சோ்க்க வேண்டும் என இந்தியா, ஜொ்மனி, ஜப்பான், பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தச் சீா்திருத்தம் தொடா்பாக நியூயாா்க்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஸ் பேசியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதிய உறுப்பினா்களாகச் சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அல்லது ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்படக் கூடாது என்பது குறித்து விவாதிப்பது, ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று மிகப்பெரிய கருத்தொற்றுமை நிலவுகிறது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்டபோது, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பால், தற்காலிக புவியியல் - அரசியல் தேவைகளை பூா்த்தி செய்ய முடியாது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்ட பிறகு, ஒரேயொரு முறை பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 1960-ஆம் ஆண்டில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிரந்தர உறுப்பினா்களாக 5 நாடுகளும், தற்காலிக உறுப்பினா்களாக 6 நாடுகளும் இருந்தன. இதில் தற்காலிக உறுப்பினா்கள் எண்ணிக்கை 10-ஆக அதிகரிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், புதிதாக நிரந்தர உறுப்பினா்களாக சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.