நைஜீரியாவில் சுமாா் 400 பயங்கரவாதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம், ஐஎஸ்வாப் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக 508 வழக்குகள் அந்நாட்டு மத்திய உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 386 பேருக்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 112 வழக்குகள் அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டன. 10 போ் விடுவிக்கப்பட்டனா்.
சிறைத் தண்டனை முடிந்து இவா்கள் பொது சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு வசதியாக, சிறையில் மறுவாழ்வு திட்டங்களில் கட்டாயம் பங்கேற்க தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








