அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது பற்றி இஸ்ரேல் அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் 3 ஆணு சக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொண்டன. இதி அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. தாக்குதல் வெற்றி என்றும், போர் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அணுசக்தி மையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்திருந்து, யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதையே, இஸ்ரேலிய அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள். அதாவது, ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்து யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு இடம்மாற்றியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
400 கிலோ கிராம் எடையுள்ள யுரேனியத்தையும், அதில் 60 சதவீதம் செரிவூட்டப்பட்ட யுரேனியமும் இருந்துள்ளது. மேலும் 90 சதவீத தளவாளங்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரானுக்கு, அமெரிக்கப் படைகளை அனுப்புவது குறித்து முடிவெடுக்க நேரம் கேட்டிருந்தபோதே, ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால், அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று உலகமே அஞ்சிய நிலையில், அதுபோன்ற எந்த அபாயத்துக்குரிய பொருள்களும் அங்கு இல்லை என்று ஈரான் தெரிவித்திருப்பதே இதனை உறுதி செய்வதாகவும் தெரிகிறது. அமெரிக்கா தாக்குதலில் முதல் இலக்காக ஃபார்டவ் இருந்துள்ளது. இங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என்று நம்பப்படுவதே அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!

பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


