ஈரான் நாட்டுக்குப் பயணிக்க வேண்டாம் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இந்தியா இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இந்தியர்கள் நிலம் மற்றும் வான்வழியாக ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு இன்று (ஏப். 23) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“ஈரானில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளின் உறுதியற்ற நிலையால், ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் அந்நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா மற்றும் ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தியக் குடிமக்கள் வான்வழி மூலமாகவோ அல்லது தரைவழி மூலமாகவோ ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் குறிப்பிட்ட நில எல்லைகளின் வழியாக உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது. இதனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் மீண்டும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Central Government has advised Indians not to travel to Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


