மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

பாகிஸ்தான் மூலம் அமெரிக்க அரசுடன் தொடர்ந்து ஈரான் செய்திகள் பரிமாற்றம்...

News image

பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு என ஈரான் அரசு அறிவிப்பு... (கோப்புப் படம்) - AP

Updated On :15 ஏப்ரல் 2026, 1:00 pm

பாகிஸ்தான் மூலம் தொடர்ந்து அமெரிக்காவுடன் செய்திகளைப் பரிமாற்றம் செய்து வருவதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் கடந்த பிப். 11 அன்று இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜராட் குஷ்னர் தலைமையிலான குழுவும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா அல்லது மீண்டும் போர் தொடருமா என சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள சூழலில், அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருவதாக ஈரான் அரசு புதன்கிழமை (ஏப். 15) அறிவித்துள்ளது.

இதுபற்றி, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி பேசுகையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானியக் குழு தெஹ்ரானுக்குத் திரும்பியது முதல் பாகிஸ்தான் மூலம் பல செய்திகள் அமெரிக்காவுடன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

இத்துடன், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has announced that it is continuously exchanging messages with the US through Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.