மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை

மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது குறித்து...

News image

ஈரான் வெளியுறவுத்துறை அமைசச்சர் சையத் அப்பாஸ் அராக்சி - ANI

Updated On :27 மார்ச் 2026, 9:48 am

மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதே நாளில், அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை மூலம் ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உள்பட 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டம் - 61வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெறும், குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த அவசர விவாதத்தில் இந்தச் சம்பவம் குறித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "இந்த ஆக்கிரமிப்புப் போர் அப்பட்டமாக நியாயமற்றது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று இந்த ஆக்கிரமிப்பைத் தொடங்கின. ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் தொடக்கப் பள்ளியைக் குறிவைத்தது ஒரு போர்க்குற்றம். அது அனைவராலும் நிபந்தனையற்ற கண்டனத்திற்குரியது. அது ஒரு சாதாரண நிகழ்வோ அல்லது தவறான கணிப்போ அல்ல" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்துள்ளார். ஆனால், இந்தத் தாக்குதல் மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல் என யுனெஸ்கோ கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi has said that the attack on an Iranian school during the Middle East war was a war crime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.