டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

News image
பேருந்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இந்த அறிவிப்பு வெளியானது.

மேற்கு மாகாணத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக உணவு பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.

உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை அதிபருக்கு எதிராக பொதுமக்களும், இலங்கையின் முக்கிய நபர்களும் கூட வெளிப்படையாக, சமூக வலைத்தளங்களில் தங்களது கடுமையான அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, வெள்ளை ஆடை என்ற பெயரில் நாளை முதல் ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் மெகுழுவர்த்தி ஏந்தியும் மக்கள் போராடி வருகிறார்கள்.

பொருளாதார பற்றாக்குறை ஏற்படக் காரணமாக இருந்த இலங்கை அரசைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை விளக்குகள் இல்லாததால் இருளில் தீப்பந்தங்களை ஏந்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடுப்புகளைத் தாண்டி அதிபா் இல்லத்தை நோக்கி சென்றவா்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி கலைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.