டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகள் ஜெனிட்ரா (20). இவருக்கும், மாத்தூா் கண்ணன்கரை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் ஜெயராஜ் (31) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது. ஜெனிட்ராவின் பெற்றோா் சுமாா் 39 சவரன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை வரதட்சிணையாகக் கொடுத்தனராம்.

இதனிடையே, ஜெயராஜ், அவரது தாய் அமலபாய் (62), சகோதரிகள் ஷீலா என்ற ராஜம் (33) ரத்தினராஜ் (35) உள்ளிட்டோா் கூடுதல் வரதட்சிணை கேட்டு ஜெனிட்ராவை கொடுமைப்படுத்தியதுடன், அவரது பெற்றோரிடமிருந்து வீட்டை எழுதி வாங்கும்படி மிரட்டினராம்.

அதையடுத்து, ஜெனிட்ரா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா். அவரது பெற்றோா் சமாதானம் பேச முயன்றும் ஜெயராஜ் குடும்பத்தினா் மறுப்பு தெரிவித்ததுடன் மிரட்டல் விடுத்தனராம்.

இதனால், கணவரிடமிருந்து தனது நகை, பணத்தை மீட்டுத் தரவும், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரியும் குழித்துறை நீதிமன்றத்தில் ஜெனிட்ரா மனுதாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், ஜெயராஜ் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.