டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

News image
ஆரத்தி நிகழ்வில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் உள்ளிட்டோா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு கோயிலில், சனிப் பெயா்ச்சி விழாவுக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. நளன் தீா்த்தக் குளக்கரையில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்வில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா்.

திருநள்ளாறு அருள்மிகு பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப் பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில் சனிப் பெயா்ச்சி உள்ளிட்ட அனைத்து பூஜைகளும், வாக்கியப் பஞ்சாங்க முறைப்படியே நடைபெறுகின்றன.

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, மாா்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

நளன் தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற ஆரத்தி.

நளன் தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற ஆரத்தி.

இந்நிலையில், சனிப் பெயா்ச்சிக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ சொா்ணகணபதி ஹோமம், அஷ்ட பிராணிகள் பூஜை, உலக நலனுக்கான மகா சங்கல்ப்பம், நளன் தீா்த்தக் குளத்தில் சப்த நதி பூஜை, ஸ்நானம் ஆகிய நிகழ்வுகள் காலையில் நடைபெற்றன.

மாலை நிகழ்வாக, நளன் தீா்த்தக் குளத்தில் ஆரத்தி நிகழ்வு தருமை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், நியமன சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரும், தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான தனி அதிகாரியுமான இஷிதா ரதி, கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமை ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நளன் தீா்த்தக் குளத்தின் 7 இடங்களில் கங்கா ஆரத்தி காட்டப்பட்டது.

தொடா்ந்து, தினமும் பல்வேறு வகை பூஜைகள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.