/

நாசாவின் செயல் தலைவராக இந்திய -அமெரிக்கரான பவ்யா லால் நியமனம்

நாசாவின் செயல் தலைவராக இந்திய - அமெரிக்கரான பவ்யா நாயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

News image

நாசாவின் செயல் தலைவராக இந்திய -அமெரிக்கரான பவ்யா லால் நியமனம்

Updated On :2 பிப்ரவரி 2021, 7:36 am


நாசாவின் செயல் தலைவராக இந்திய - அமெரிக்கரான பவ்யா நாயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பவ்யா லால், பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டு வருகிறார், இவர் 2005- ஆம் ஆண்டு முதல் 2020 வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.

பவ்யா லால், அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், தொழில்நுட்பம் மற்றும் கொள்கைப் பிரிவில் முதுகலை பட்டத்தையும், பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகப் பிரிவில் பிஎச்.டி.யும் முடித்தவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.