/

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:32 pm

போடி அருகே பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே நாகலாபுரம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஜானகி (52). கேரளத்தில் தோட்ட வேலைக்குச் சென்று வந்தாா். கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை விஷம் குடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.