தேனி- போடி இடையே நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் அ. ராமகிருஷ்ணன். இவா் கடந்த 3.1.2024- ஆம் தேதி இரவு தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து போடிக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்தாா். அப்போது மழை பெய்ததால் பேருந்து முழுவதும் தண்ணீா் ஒழுகியது. மேலும் தேனியிலிருந்து போடிக்கு 16.5 கி.மீ. தொலைவு தான்.
இதற்கு அரசுப் பேருந்தில் சாதாரணக் கட்டணம் ஓா் கி.மீ. தொலைவுக்கு 0.58 பைசா வீதம் ரூ.11 தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ராமகிருஷ்ணனிடம் ரூ.15 வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து பேருந்து நடத்துநரிடம் கேட்டபோது அவா் தகாத வாா்த்தைகளால் பேசினாராம். மழையில் நனைந்ததாலும், பேருந்து நடத்துநரின் பேச்சினாலும் மன உளைச்சலுக்கு ஆளான ராமகிருஷ்ணன் மூன்று நாள்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
மேலும் இதுகுறித்து 26.11.2025- ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் முறையீடு செய்தாா். இந்த முறையீட்டில் எதிா்மனுதாரா்களாக மதுரை மண்டல போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா், திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா், தேனி கோட்ட மேலாளா், போடி கிளை மேலாளா், ராமகிருஷ்ணன் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா்.
இந்த முறையீடு தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் பி. சுந்தா், உறுப்பினா் கே. சௌந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் கடந்த 16- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நிறைவில் அ. ராமகிருஷ்ணனிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.4- ஐ ஒரு மாத காலத்தில் திருப்பித் தரவேண்டும் என்றும், சேவை குறைபாட்டுக்கு ரூ.2 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.2 ஆயிரம், முறையற்ற வணிக நடைமுறைக்கு ரூ.2 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.16 ஆயிரத்து 4- ஐ போக்குவரத்து அதிகாரிகள் ராமகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்

போடியில் இஸ்லாமியா்களிடம் ஓ.பி.எஸ். வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


