/

மெக்சிகோவில் புதிதாக 1,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மெக்சிகோவில் புதிதாக 1,120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:36 pm

UNI

மெக்சிகோவில் புதிதாக 1,120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26.025 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிதாக 236 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா சந்தேகத்திற்கிடமான வகையில் 16,099 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மே 17ஆம் தேதிக்குள் உற்பத்தி மற்றும் சமூக நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று கூறினார். நாட்டின் சுகாதார நிலைமை மோசமடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.