சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக - மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த பேரவைத் தேர்தலைப் போன்றே இந்த முறையும் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
Summary
Seat-sharing talks have begun between the DMK and the Manithaneya Makkal Katchi Party ahead of the assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



