திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 5:20 am

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர். இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

Summary

Jawahirullah has said that we have asked DMK for 5 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.